முகப்பு
தமிழ்நாடு

மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

திருநெல்வேலியில் பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 15 டிசம்பர், 2022 at 7:58 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:36 PM


திருநெல்வேலியில் பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மணிமுத்தாறு  அணைக்கட்டு திட்டத்தின் கீழ் மணிமுத்தாறு கால்வாய் முன்னுரிமை பகுதியான 3-வது மற்றும் 4-வது ரீச்சுகளை சார்ந்த 12,018 ஏக்கர் மறைமுக பாசன நிலங்களுக்கு டிசம்பர் 16 முதல் 2023 மார்ச் 31 முடிய 106 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப பிசான பருவ சாகுபடி செய்வதற்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. 

Advertisement

இதன்மூலம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 12,018 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.