தமிழ்நாடு

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்கள் இன்று முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்காக வாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் ரூ.10 ஆயிரம் நன்கொடையாக அளித்து, ரூ.300 செலுத்தி தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரையும் மகா லகு தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

SCROLL FOR NEXT