கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 5,104 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழ்நாட்டில் புதிதாக 5,104 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,11,773 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,104 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21,027 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 7 பேர், அரசு மருத்துவமனைகளில் 6 பேர் என மொத்தம் 13 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 32,72,322 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37.772 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,05,892 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 839
கோவை - 807

மற்ற மாவட்டங்களில் 500-க்கும் குறைவாகவே பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

இருமல் மருந்து விவகாரம்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? உலக சுகாதார அமைப்பு கேள்வி

SCROLL FOR NEXT