தமிழ்நாடு

ஆஞ்சனேயர் ஜெயந்தி: சுசீந்திரம் 18 அடி உயர ஆஞ்சனேயருக்கு 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம்

DIN

நாகர்கோவில்: ஆஞ்சனேயர் ஜெயந்தியையொட்டி சுசீந்திரம் 18 அடி உயர ஆஞ்சனேயருக்கு 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயர் சிலை உள்ளது.

ஆஞ்சனேயருக்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.

நிகழாண்டு ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நடைபெற்றது. இவ்விழா சனிக்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

ஆஞ்சனேயர் ஜெயந்தியையொட்டி சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயரை தரிசனம் செய்யும் திரளான பக்தர்கள் கூட்டம்.

தொடர்ந்து காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமி க்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும். மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், நடைபெற்றது.

சுசீந்திரம்  விஸ்வரூப ஆஞ்சனேயர்.

காலை 8 மணிக்கு 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு பால், பன்னீர், களபம், இளநீர், சந்தனம், குங்குமம், கரும்பு ச் சாறு, செந்தூரம், தயிர், திருநீறு உள்ளிட்ட 16  வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் சுசீந்திரம் 18 அடி உயர ஆஞ்சனேயர்.

இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சனேயரை வழிபட்டனர், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT