தமிழ்நாடு

73 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதி: சென்னை மாநகராட்சி

முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தகுதியானவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

DIN

சென்னை மாநகராட்சி முழுக்க 73 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தகுதியானவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இணை நோய் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த மாநகராட்சி சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த குழுக்கள் பகுதி வாரியாக பிரிந்து தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபடும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் திங்கள் கிழமை (ஜன.10) 6,190 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 94 ஆயிரத்து 844-ஆக உயா்ந்துள்ளது. 5 லட்சத்து 55 ஆயிரத்து 21 போ் குணமடைந்துள்ளனா். 30,843 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,680 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT