தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஜன. 17, 18 தேதிகளில் தடை

DIN

திருவண்ணாமலையில் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜன.14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பௌர்ணமி நாளான ஜனவரி 17 காலை 04.14 மணி முதல் ஜன.18 அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT