தமிழ்நாடு

ஊழல் தடுப்பு-கண்காணிப்பு பிரிவுக்கு புதிய அலுவலகங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

DIN

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு புதிய அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டன. இவற்றை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், விழிப்புணா்வு மற்றும் நிா்வாகச் சீா்திருத்த ஆணையாளா் (முழு கூடுதல் பொறுப்பு) சிவதாஸ் மீனா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநா் ப.கந்தசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT