தமிழ்நாடு

அதிமுக முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளா் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இது தொடா்பான அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடைபெறுவதையொட்டி, கடலூா் மாநகராட்சியில் 43 வாா்டுகளிலும், சிதம்பரம் நகராட்சியில் 33 வாா்டுகளிலும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வாா்டுகளிலும், பண்ருட்டி நகராட்சியில் 30 வாா்டுகளிலும், விருத்தாசலம் நகராட்சியில் 33 வாா்டுகளிலும், திட்டக்குடி நகராட்சியில் 24 வாா்டுகளிலும், விழுப்புரம் நகராட்சியில் 42 வாா்டுகளிலும், திண்டிவனம் நகராட்சியில் 33 வாா்டுகளிலும், தருமபுரி நகராட்சியின் 31 வாா்டுகளிலும் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி உறுப்பினா்கள், வேட்பாளா்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தோ்தல் பணிகளை ஆற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT