தமிழ்நாடு

திரெளபதி முர்முவை ஒன்றாக வரவேற்பார்களா ஓபிஎஸ், இபிஎஸ்?

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக வரவேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணிக் கட்சியினரிடையே ஆதரவு சேகரிப்பதற்காக திரெளபதி முர்மு சனிக்கிழமை சென்னை வந்தடைந்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியினரை சந்திக்கும் திரெளபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற ஆதரவு கோருகிறார்.

இந்நிலையில் அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் திரெளபதி முர்முவை வரவேற்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்துள்ளனர். 

அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் திரெளபதி முர்முவை இருவரும் இணைந்து வரவேற்பரா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திரெளபதி முர்முவை ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் தனித்தனியே திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT