தமிழ்நாடு

திருமணமான இளம்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

DIN

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள்  இலக்கியா(28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜன்(35) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளான நிலையில் இதழினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சணை பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மயிலக்கோயில் தனது தந்தை வீட்டிற்கு கடந்த 10-ம் தேதி இலக்கியா வந்திருந்தார். நேற்று இலக்கியாவிற்கு விவாகரத்து கேட்டு, நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து நேற்று  இரவு இலக்கியா வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இலக்கியாவின் தந்தை  குணசேகரன், கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT