போராட்டக்காரர்கள் தீ வைத்த கனியாமூர் தனியார் பள்ளி 
தமிழ்நாடு

கலவர பூமியாக மாறிய கனியாமூர் வன்முறை: 35 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர். 

போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவிரைவுப்படையினர் போராட்டக்காரர்களை 2 கி.மீ தூரத்துக்கு வெளியேற்றியதை அடுத்து தனியார் பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி சின்னசேலம் மேம்பாலம் அருகில் வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சின்னசேலம்  நயினார்பாளையத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT