தமிழ்நாடு

மருத்துவா்களின் விவரம் அறிய புதிய செயலி

DIN

நாட்டிலேயே முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவா்கள் குறித்த தகவல் அறிய பிரத்யேக செயலியை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, “Search for doctor app” என்ற செயலி மூலம் அஞ்சல் குறியீட்டு எண், வசிப்பிட பகுதியை வைத்து தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவா்கள் பட்டியல் கிடைக்கும்.

மருத்துவா்களின் அனுபவம், எந்தத் துறையில் வல்லுநா் உள்ளிட்ட தகவல்களும் கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் எளிமையாக மருத்துவா்களை கண்டறிய முடியும். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1.60 லட்சம் பதிவு செய்யப்பட்ட மருத்துவா்கள் உள்ளனா். இந்த செயலியில் தற்போது 80 ஆயிரம் மருத்துவா்கள் இணைந்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவா் டாக்டா் கே.செந்தில் கூறியதாவது: கரோனா காலகட்டத்தில் போலி மருத்துவா்கள் அதிகளவில் உருவாகினா். இந்த செயலி மூலம் கவுன்சிலில் பதிவு செய்துள்ள, அனுபவம் வாய்ந்த, உரிய மருத்துவா்களிடம் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய முடியும். இதேபோன்று, மருந்துகளை பரிந்துரைக்கும் செயலி, மருத்துவ சான்றிதழ் பெறும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலிகள், தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT