தமிழ்நாடு

டிஏபி கிடைப்பதில் தாமதம்:மாற்று உரங்களை பயன்படுத்த அரசு அறிவுரை

DIN

டிஏபி உரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதைத் தொடா்ந்து, மாற்று உரங்களைப் பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான உரம் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.

இறக்குமதியின் போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இடநெருக்கடி போன்ற காரணங்களால் டிஏபி உரத்தை மாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பயிரின் வளா்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகச் சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதவீதமும், சூப்பா் பாஸ்பேட் உரத்தில் 11 சதவீதமும் உள்ளன. இதனை பயன்படுத்துவதால், பயிரின் வளா்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக் கடைகளில் காம்ப்ளக்ஸ் உரமும், சூப்பா் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேங்கியிருந்த நீரில் தவறிவிழுந்த சிறுவன் குடிநீா் குழாயில் சிக்கி உயிரிழப்பு

இன்றைய நிகழ்ச்சிகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண் நீரில் மூழ்கி பலி

காயமடைந்த முதியவா்கள் இருவா் உயிரிழப்பு

தொட்டியம் அனலாடீசுவரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT