தமிழ்நாடு

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி உடனாகிய ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில்  ஆடிப்பூர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி உடனாகிய ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில்  ஆடிப்பூர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உலகப் புகழ் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில்  காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயர் எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக ஸ்ரீஅபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமியாக ஆக்கிய திருவிளையாடல் உள்ளிட்ட பல்வேறு தலபெருமைகளை உடைய இவ்வாலயத்தில்  ஸ்ரீஅபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. 

கடந்த 23ம் தேதி தங்க கொடிமரத்தில் ரிஷபகொடி ஏற்றப்பட்டு 10 நாள்   உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக  தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன்  தேரில் எழுந்தருளி  மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. 

கோயிலை சுற்றி நான்கு  வீதிகளில் ஸ்ரீ அபிராமி அம்மன் எழுந்தருளிய தேர் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

படவிளக்கம்: திருக்கடை ஸ்ரீ அமிர்தகரேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

SCROLL FOR NEXT