தமிழ்நாடு

30வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 13.83 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான 30வது மெகா தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

சுகாதாரத் துறை தரவுகளின்படி, 

மாநிலத்தில் 13,83,573 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, அதில் 2,44,520 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 10,30,753 பேர் இரண்டாவது டோஸையும், 1,08,300 பேர் பூஸ்டர் டோஸையும் செலுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 94.31 சதவீதமும், 2-வது தவணையாக 84.81 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 

இதேபோல் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 17,62,663 பேருக்கும், 2-வது தவணையாக 10,85,265 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 29,87,648 பேருக்கும், 2-வது தவணையாக 24,23,198 பேருக்கும், சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயது மேற்பட்டவர்களுக்கு என 13,51,908 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தடுப்பூசி முகாம்களில் மட்டும் இதுவரை 4,43,83,000 பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மக்கள் அனைவரும் கரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT