ஷீபாஸ்ரீ 
தமிழ்நாடு

தேர்வு முடிவு பயம்: திருப்பத்தூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆலங்காயம் அடுத்த நாயக்கனேரி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி தேர்வு முடிவு பயத்தால்  கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனேரி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி தேர்வு முடிவு பயத்தால்  கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஷீபாஸ்ரீ (17).

இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில், வீட்டில் பெற்றோர்களிடம் தேர்வு சரியாக இல்லாத காரணத்தினால் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வரும் மற்றும் தேர்வில் நான் தேர்ச்சி பெறுவது சந்தேகம் என்று தொடர்ச்சியாக கூறி வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று மாலை முதல்  ஷீபாஸ்ரீ காணவில்லை என்று தேடி வந்த நிலையில், இன்று காலை வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று தேர்வு முடிவு வெளியான நிலையில், மாணவி 344 மதிப்பெண் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT