தமிழ்நாடு

சென்னை மேயர் வேட்பாளராக பிரியா: திமுகவின் 20 மேயர்கள் பட்டியல்

DIN

திமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பக்கோணம்  மாநகராட்சியை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளை திமுக வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு ஆர்.பிரியா,  மதுரை மாநகராட்சிக்கு இந்திராணி, திருச்சிக்கு மு.அன்பழகன், திருநெல்வேலிக்கு பி.எம்.சரவணன், கோவைக்கு கல்பனா, சேலம் மாநகராட்சிக்கு ஏ.இராமசந்திரன், திருப்பூருக்கு என்.தினேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு நாகரத்தினம், தூத்துக்குடிக்கு என்.பி.ஜெகன், ஆவடிக்கு ஜி.உதயகுமார், தாம்பரம் மாநகராட்சிக்கு வசந்தகுமாரி கமலகண்ணன், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மகாலட்சுமி, வேலூர் மாநகராட்சிக்கு சுஜாதா ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சண்.இராமநாதன், கரூருக்கு கவிதா, ஓசூர் மாநகராட்சிக்கு எஸ்.ஏ.சத்யா, திண்டுக்கல்லுக்கு இளமதி, சிவகாசிக்கு சங்கீதா, நாகர்கோவிலுக்கு மகேஷ் ஆகியோரை மேயர் வேட்பாளர்களாக திமுக நிறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT