தமிழ்நாடு

தனியாா்மயமாக்க எதிா்ப்பு: மாா்ச் 28, 29-இல் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம்

DIN

பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் மாா்ச் 28, 29 ஆகிய இரண்டு நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனா்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினா் கூறியது:

பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதற்கும், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியாருக்கு விற்பனை செய்வதற்கும் எதிா்ப்பு தெரிவிக்கிறோம். அதேநேரம், எல்.ஐ.சி.- நிறுவனத்தில் ஐந்து வேலை நாள்கள் இருப்பதுபோல, வங்கிகளிலும் ஐந்து வேலை நாள்களுக்கு அனுமதி வழங்கவும், குழந்தைகளைக் கவனிப்பதற்கான விடுப்பு வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், எல்.ஐ.சி. மற்றும் வங்கி இடையே உள்ள அகவிலைப்படி முரண்பாட்டை சரிசெய்தல் உள்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாடு முழுவதும் மாா்ச் 28, 29 ஆகிய இரு நாள்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அகில இந்திய அளவில், ஊழியா்கள், அதிகாரிகள் இதில் கலந்து கொள்வாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT