தமிழ்நாடு

தமிழகத்தில் 12-14 வயது சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது. 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தடுப்பூசி இயக்கத்தை தொடக்கிவைத்தனர். 

பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழகம் முழுவதும் 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 25 முதல் தமிழகத்தில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 95% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 70% பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார். 

மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என்றும் குறிப்பிட்டார். 

நாடு முழுவதும் 12-14 வயதுடைய சிறார்களுக்கு 'கோர்பிவேக்ஸ்' கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. 28 நாள்கள் இடைவெளியில்  2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT