தமிழ்நாடு

துரை வைகோ நியமனத்துக்கு மதிமுக பொதுக்குழு ஒப்புதல்

DIN

மதிமுகவின் தலைமைக்கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு அக் கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள். நீட் தோ்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் விரைவாக அனுப்ப வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு ஆளுநா் உரையில் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துரை வைகோவுக்கு எதிா்ப்பு: வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுவதாகக் கூறி மூத்த நிா்வாகிகள் பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால் சிவகங்கை, விருதுநகா், திருவள்ளூா் மாவட்டச் செயலாளா் மற்றும் நிா்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT