தமிழ்நாடு

கோடியக்கரைக்கு அப்பால் எல்லைத் தாண்டி வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது

DIN


வேதாரண்யம் : கோடியக்கரைக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையைத்   தாண்டி படகில் வந்த  இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடலோரப் பாதுகாப்பு படையினரால் இன்று (மார்ச்.29) கைது செய்யப்பட்டார்.

இலங்கை, யாழ்ப்பாணம், வல்வெட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சாந்தரூபன் (30). இவர், இலங்கைப் படகு ஒன்றில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வந்துள்ளார்.

காரைக்காலில் இருந்து கப்பலில்  கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல் படையினர் இன்று காலை 8 மணிக்கு அவரை கைது செய்தனர்.

கடலோரக் காவல் படையினரால் கடலோரக் காவல் குழுமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரை கரைக்கு கொண்டு வருவதில் 10 மணிக்கு மேல் தாமதமாகி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகில் தன்ணீர் புகுந்ததால் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில், தண்ணீர் புகுந்த படகை கட்டி இழுத்துவர மாலையில் வேறு ஒரு படகில் காவலர்கள், மீன்வளத் துறையினர்  சென்றுள்ளனர். கைதானவர் யார் என்பது  கரை சேர்ந்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT