மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 
தமிழ்நாடு

எரிபொருள் விலை உயர்வு: ஏப். 4ல் சென்னையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

DIN

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ இந்த கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்றும் மதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT