தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000: ஜூலை 15 முதல் அமல்

DIN

அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15- ஆம் தேதி அமலுக்கு வருகிறது எனவும், இந்தத் தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவியா் பட்டியல் சேகரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளில், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விவரங்களை அனுப்புமாறு பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, உயா்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி தொடங்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயா் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT