தமிழ்நாடு

கிண்டியில் முதியவர்களுக்கான மருத்துவமனை: மா. சுப்பிரமணியன்

DIN


சென்னை: கிண்டியில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை கிண்டியில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும்.

கரோனா நோயாளிகள் இல்லாததால், கரோனா மருத்துவமனை, புதிய வசதிகளுடன் முதியவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது.

உலகிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான மருத்துவமனையாக இரு அமையவிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி பின்னடைவு

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை!

தென்சென்னையில் தமிழச்சியும், தூத்துக்குடியில் கனிமொழியும் முன்னிலை!

பிரதமர் மோடி பின்னடைவு!

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

SCROLL FOR NEXT