கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நினைவு அஞ்சலியில் வெளிமாவட்டத்தினர் கலந்துகொள்ள அனுமதி இல்லை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வெளிமாவட்டத்தினர் கலந்துகொள்ள அனுமதி இல்லை. 

DIN


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை நடைபெற இருக்கும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், வெளிமாவட்டத்தினர் கலந்துகொள்ள அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு  நாளை 4-ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்கள்  30 (2) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை. 

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியாபட்டி மற்றும் சவலாப்பேரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டும் .

மேலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  5-காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 9-காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18-காவல் துணை கண்காணிப்பாளர்கள், 37-காவல் ஆய்வாளர்கள் உள்பட சுமார்  2500- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT