தமிழ்நாடு

மும்முனை மின்சார இணைப்புக்கு லஞ்சம்:  இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை

DIN

திருவள்ளூர்: மும்முனை மின்சார இணைப்புக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் வித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை முகப்பேரில் உள்ள வேணுகோபால் தெருவைச் சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த, 2011-இல் தனது வீட்டிற்கு மும்முனை மின்சாரம் இணைப்பு கோரி, அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது, மின்வாரிய இளநிலை பொறியாளரான மணி என்பவர், ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளார். கையூட்டு கொடுக்க விரும்பாத அரிதாஸ், இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் செய்தார்.  

கடந்த, 2011-இல் ஜன.31 ஆம் தேதி, அரிதாஸிடம், இளநிலை பொறியாளர் மணி, கையூட்டு பெற்ற போது அப்பகுதியில் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இறுதி விசாரணை புதன்கிழமை நீதிபதி வேலரசு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்குரைஞர் வி.அமுதா ஆஜராகி வாதாடினார். அப்போது, குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் பொறியாளர் மணிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT