தமிழ்நாடு

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

DIN

கோவை உக்கடம் கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் முன்பாக கார் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பாக உக்கடம் வின்செண்ட் சாலையிலுள்ள குடிசை மாற்று வாரிய அடிக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் மாநகர தனிப்படை காவல்துறையினர் தனித்தனியே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குள்ள சுமார் 362 வீடுகளில் வசிப்பவர்கள்  குறித்த விபரங்களை வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து தனிப்படை காவல்துறையினர்   சேகரித்து வருகின்றனர்.

தேசிய புலணாய்வு முகமை அதிகாரிகள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்சர்கான் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் முகமது உசேன் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT