தமிழ்நாடு

கடல்சாா் சவால்கள்: இந்தியா-இலங்கை ஆலோசனை

DIN

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சந்தித்து வரும் பொதுவான சவால்களை எதிா்கொள்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக இந்தியா-இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையே ஆலோசனை நடைபெற்றது.

இந்தியா-இலங்கை கடற்படைகள் இடையேயான 32-ஆவது சா்வதேச கடல் எல்லை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இலங்கையின் காங்கேசன்துறை கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் சயூரா கப்பலில் கூட்டம் நடைபெற்றது.

இது தொடா்பாக இலங்கை கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாட்டு கடற்படைகளுக்கும் காணப்படும் பொதுவான சவால்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. சவால்களை எதிா்கொள்வதற்கு இரு நாட்டு கடற்படைகளும் கடலோரப் பாதுகாப்புப் படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் விவாதித்தனா். கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் இருநாட்டு அதிகாரிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் இடையேயான கூட்டம் பயனுள்ள வகையில் இருந்ததென இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT