தமிழ்நாடு

பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னம், 700 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ  அன்னம், 700 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

DIN

தஞ்சாவூர்: பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ  அன்னம், 700 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், கட்டட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,

சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் மற்றும் மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகள் என 700 கிலோ  கொண்டும் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.

இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது. அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT