தமிழ்நாடு

போக்குவரத்து விதி மீறல் அபராத உயர்வை எதிர்த்து வழக்கு

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

DIN

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழக முழுவதும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கு ரூ.1000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தலைக் கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து மதுரை ஜலாலுதின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

அதில், அபராத உயர்வால் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாணை எதிர்க்கும் மதுரை ஜலாலுதின் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு: போலீஸாா் விசாரணை

தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT