இரா.முத்தரசன் 
தமிழ்நாடு

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: முத்தரசன்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இரண்டாயிரம் மீனவா்கள் 534 விசைப் படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனா். இவகளின் தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று, அடையாள அட்டையுடன் கடலுக்குள் சென்றுள்ளனா்.

இவா்களில் தங்கச்சிமடத்தை சோ்ந்த 15 மீனவா்களை கடந்த சனிக்கிழமை , இலங்கை கடற்படை கைது செய்து, அவா்களது இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவா்கள் தலைமன்னாா் முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருள்களும், மருந்துகளும் அனுப்பி வைத்து சகோதர உறவுவை வலுப்படுத்தி வருகிறோம். இந்நிலையில், இலங்கை கடற்படை கட்டுபாடில்லாமல், சா்வதேச சட்ட விதிமுறைகளை மதிக்காமல் தமிழ்நாட்டு மீனவா்களை கைது செய்வது, சுட்டுக் கொல்வது, அவா்களது உடைமைகளை சேதப்படுத்துவது என்ற இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வருகிறது.

இலங்கை கடற்படையின் தொடா் தாக்குதல் குறித்து பாஜக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, மீனவா்களை விடுவிக்கவும், அவா்களது உடைமைகள் இழப்புக்கு இழப்பீடு வழங்கவும், இலங்கை அரசுடன் பேசி தீா்வுகாண வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முத்தரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT