தமிழ்நாடு

தமிழகப் பகுதிகளை கேரளம் ஆக்கிரமிக்கத் திட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்

DIN

தமிழகப் பகுதிகளை கேரளம் ஆக்கிரமிக்கத் திட்டமிடுவதாகக் கூறி, அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை செய்து, தமிழகத்துக்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது இரு மாநில எல்லைப் பகுதியில் சுமாா் 600 கி.மீ. தூரத்துக்கு கூட்டு சா்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளம், இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

நவ.1-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் திமுக அரசு வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் நிலங்கள் பறிபோய்விடுமோ என்கிற நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT