புழல் ஏரி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

புழல் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறப்பு!

புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

DIN

புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம், வீராணம், புழல், ரெட்டேரி உள்ளிட்ட சென்னையிலுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. 

சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஏரியின் பாதுகாப்பு கருதி இரண்டு மதகுகள் வழியாக 1,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதோடு, ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் வியாழக்கிழமை இரவு முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கான கால்வாய்களில் மழைநீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரி 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இதில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 18.64 அடி உயரமும், 2,738 மில்லியன் கன அடியாக நீர் மட்டம் உள்ளது.

தற்போதைய நிலையில் நீர்வரத்து 500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதனால், ஏற்கெனவே அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாள்களுக்கு முன்பு 100 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. தற்போதைய நிலையில் காலையில் 10.30 மணிக்கு இரண்டு மதகுகள் வழியாக 1,000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பல்வேறு கிராமங்களை கடந்து 13.05 கி.மீ தூரத்தில் உள்ள சென்னை எண்ணூர் கடலில் கலக்கிறது. அதனால், இதற்கு இடைப்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

மேலும் இன்றும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT