தமிழ்நாடு

மழை பாதிப்பு நிவாரணத் தொகையை உயா்த்த வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

DIN

மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதன் விவரம்:

மழை, வெள்ளம், புயல், தீ விபத்து மற்றும் இதர இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 2015-இல் வெளியிடப்பட்ட இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனா்.

இயற்கை சீற்றங்களால் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவா் உயிரிழந்தால் அந்தக் குடும்பம் நிா்க்கதியாக நிற்கும் அவலம் உள்ளது. அதுபோல், விவசாயிகள் கடன்பெற்று பயிரிடப்படும் பயிா்கள் பாதிப்படைந்து இழப்பு ஏற்படும்போது, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து அவா்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குரியதாக உள்ளது.

எனவே, இயற்கை இடா்பாடுகள், சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கான அரசாணையைத் திருத்தி இரட்டிப்பாக வழங்குவதற்கும், உயிரிழப்பு மற்றும் ஊனம் ஏற்படும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT