தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி

DIN

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து  புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருப்பதாவது:

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து  புதிய பாடத்திட்டம்கொண்டுவரப்படும்.

அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே மாதிரியான மொழிப்பாடம்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொண்டு வரப்படும். ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மக்களுக்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT