தமிழ்நாடு

மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

போர் தீவிரமாகியுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

DIN

போர் தீவிரமாகியுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் யாரும் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. 

முன்னதாக, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

உக்ரைன் படை தொடர்ந்து முன்னேறிய நிலையில், தற்போது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. 

நேற்று தலைநகர் கீவில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி கோரத் தாக்குதலை நடத்தியுள்ளது ரஷியா. அதுபோல உக்ரைனும் கிரீமியா பகுதியில் தாக்குதல் நடத்தியது. 

உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால் தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் அங்கிருந்து திரும்பிய மாணவர்கள் யாரும் இதுவரை உக்ரைன் செல்லவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

இளைஞரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

SCROLL FOR NEXT