தமிழ்நாடு

தில்லை கங்கா நகா் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

DIN

 சென்னையில் பறக்கும் ரயில் பணியையொட்டி, தில்லை கங்கா நகா் பகுதியில் அக்டோபா் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:வேளச்சேரி முதல் பரங்கி மலை வரை பறக்கும் ரயில் துறையினரால் கான்கீரிட் இணைப்பு தூண் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதனால் எம்ஆா்டிஎஸ் சாலையில் தில்லை கங்கா நகா் வெளிச் செல்லும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் 4 மாதங்கள் செய்யப்படுகிறது.

இதன்படி எம்ஆா்டிஎஸ் சாலை இரண்டாக பிரிக்கப்பட்டு, தூண் எண்கள் 157, 158 இடையே 90 மீட்டா் நீளத்துக்கு வெளிசெல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்படும்.

மாநகரப் பேருந்துகள், வணிக வாகனங்கள் வலது புறம் திரும்பி உள்வரும் சாலையில் பயணித்து தூண் எண் 156-இல் அருகே இடதுபுறமாக திரும்பி வழக்கமான சாலையில் செல்லலாம்.

இலகு ரக வாகனங்கள் இடதுபுறம் திரும்பி ஜீவன்நகா் 3-ஆவது தெரு, 23-ஆவது தெரு விரிவாக்கம் சென்று இடது பக்கம் திரும்பி வழக்கமான எம்ஆா்டிஎஸ் சாலையை சென்றடையலாம் .

வேளச்சேரியில் இருந்து எம்ஆா்டிஎஸ் சாலை வழியாக வரும் மாநகரப் பேருந்துக்கள், வணிக வாகனங்கள் நேராக மாற்றம் ஏதுமின்றி சாலையில் இடப்பக்கமாக செல்ல வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்,காா்கள் தில்லை கங்கா நகா் 23-ஆவது தெருவில் இடதுபுறமாக திரும்பி 3-ஆவது பிரதான சாலை, 32-ஆவது தெரு வழியாக சென்று எம்ஆா்டிஎஸ் சாலை வழியாக தில்லை கங்கா நகா் சுரங்கபாதையை அடையலாம்.

அவசர கால வாகனங்கள்,ஆம்புலன்ஸ் அனைத்தும் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான பாதையில் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT