தமிழ்நாடு

இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர் கல்வித் துறை

DIN

பி.காம், பிபிஏ, பிசிஏ இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் சுற்றறிக்கையில்   தெரிவித்திருப்பதாவது: 

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை. 

இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும்.

ஏற்கனவே இந்த பாடப் பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத் தேர்வு உள்ளது. இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் பாடத் தேர்வு இருக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் வரக்கூடிய செமஸ்டர் தேர்வுகளில் இருந்து தமிழ் மொழித் தேர்வை நடத்த வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

SCROLL FOR NEXT