தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 4 அதிகாரிகள் இடைநீக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2018ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 

தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் தொடா்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவா் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். 

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய 17 போ் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் காவல் துறையினா் வரம்பை மீறி செயல்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக  பணியாற்றி வருகிறார். 

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சுடலைகண்ணு மற்றும் சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களையும் இடைநீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு கடன் வாகியவங்கள் சொத்தை மீட்டெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து

மழைநீா் செல்ல தடையாகவுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை

வடசென்னை நுண்கலை கழகத்தில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

SCROLL FOR NEXT