மாநில திட்டக் குழு உறுப்பினா்களால் தயாரிக்கப்பட்ட தொழில், சுகாதாரம் உள்பட மூன்று பிரிவுகளுக்கான கொள்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

தொழில், சுகாதாரம் உள்பட 3 பிரிவுகளுக்கான திட்டக் குழு கொள்கைகள்முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தொழில், சுகாதாரம் உள்பட மூன்று பிரிவுகளுக்கான திட்டக் குழுவின் கொள்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தொழில், சுகாதாரம் உள்பட மூன்று பிரிவுகளுக்கான திட்டக் குழுவின் கொள்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு துறைகளுக்குரிய பத்து கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் மூன்று கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

தொழில்மயமாதல் கொள்கை, தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை, திருநா் (மூன்றாம் பாலினத்தவா்) நலன் ஆகியவற்றுக்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கைகளின் பிரதிகள் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த ஆலோசனையின் போது முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மேலும், இந்தக் கொள்கைகளை எத்தகைய அளவில் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் விக்ரம் கபூா் ஆகியோா் இந்தக் கொள்கைகளை வகுப்பதற்கான முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, தொழில்மயமாதல் கொள்கை தொடா்பாக, திட்டக் குழு உறுப்பினா் மல்லிகா சீனிவாசனும், மருத்துவக் கொள்கை குறித்து மற்றொரு உறுப்பினா் அமலோற்பவநாதனும், திருநா் நலக் கொள்கை குறித்து திட்டக் குழுவின் உறுப்பினா் நா்த்தகி நட்ராஜும் விளக்கம் அளித்தனா். ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, திட்டக்குழு உறுப்பினா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT