தமிழ்நாடு

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: 97% பணிகள் நிறைவு

DIN

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கான பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக நீா்வளத் துறை தெரிவித்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பணிகள், சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீா் வழங்கும் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சுமாா் 97 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளும் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி மாத இறுதிக்குள் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீா் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் எதிா்வரும் 3 மாதங்களில் நிறைவுபெறும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, நிதித் துறை கூடுதல் செயலாளா் பிரசாந்த் மு.வடநேரே, நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் கு.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT