கந்த சஷ்டி! சுவாமிமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் 
தமிழ்நாடு

கந்த சஷ்டி! சுவாமிமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவில் கந்த சஷ்டியையொட்டி மூலவர் சுவாமிநாத சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

DIN

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவில் கந்த சஷ்டியையொட்டி மூலவர் சுவாமிநாத சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தை சிவபெருமான உபதேசத்தால் இவர் சுவாமிநாத சாமி என்று போற்றப்படுகிறார். இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்து  தினங்கள் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி  தொடங்கியது. தினமும் காலை மாலை இருவேளைகளில் சாமி வீதி உலா நடைபெற்றது. இன்று மூலவர் சுவாமிநாத சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம்  தீபாராதனைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு 108 சங்க அபிஷேகம்  நடைபெற உள்ளது. மாலை பராசக்தியிடம் சண்முகர் வேல் வாங்கி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT