வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 96 குறைப்பு 
தமிழ்நாடு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 96 குறைப்பு

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 96 குறைக்கப்பட்டு, வியாழக்கிழமை  முதல் ரூ. 2,045-க்கு விற்பனையாகிறது. 

DIN


சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 96 குறைக்கப்பட்டு, வியாழக்கிழமை  முதல் ரூ. 2,045-க்கு விற்பனையாகிறது. 

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ரூ. 2,141-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி ரூ. 96 குறைக்கப்பட்டுள்ளது. 

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த மே மாதத்திற்கு பிறகு 5-ஆவது முறையாக குறைக்கப்பட்டிருப்பது வணிகா்கள் மத்தியில் இருந்துவந்த பெரும் கவலையை சற்று குறைத்துள்ளது. 

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமின்றி விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT