தமிழ்நாடு

வைகை ஆற்றில் 15000 கன அடி திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

DIN

வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது 4000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்நிலையில் இன்று காலை 15,000  கனஅடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திடவும், பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT