கோப்புப்படம் 
தமிழ்நாடு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

DIN

மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,25,000 கன அடி வரை நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக கூடுதலாக வெள்ளநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது.

இன்று காலை 10.30 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 90,000 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேட்டூர் அணைக்கு கீழ் பகுதியில் உள்ள 'மாவட்ட ஆட்சியருக்கு மேட்டூர் ஸ்டான்லி அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT