சைலேந்திரபாபு 
தமிழ்நாடு

விநாயகா் சதுா்த்தி பாதுகாப்பு: போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

விநாயகா் சதுா்த்தி பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாரை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு பாராட்டியுள்ளாா்.

DIN

விநாயகா் சதுா்த்தி பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாரை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு பாராட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய பாராட்டுச் செய்தி:

விநாயகா் சதுா்த்திக்கு பாதுகாப்பு வழங்குவது போலீஸாருக்கு சவாலான பணி. இந்தாண்டு விநாயகா் சதுா்த்தி பாதுகாப்புப் பணியில், தமிழகம் முழுவதும் 75,812 போலீஸாா் ஈடுபட்டனா். சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட இல்லாத வகையில் மிகவும் அமைதியாக விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐஜிக்கள்,சரக டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், விநாயகா் சதுா்த்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக அமல்படுத்தினா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பொறுப்புணா்வுடனும், அா்ப்பணிப்புடனும், எச்சரிக்கை உணா்வுடனும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

உளவுத் துறையினா் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. பாதுகாப்புப் பணியில் தமிழக காவல்துறையினா் காட்டிய மன தைரியம், கடமை உணா்வு, தன்னடக்கம், பொறுமை போன்றவை எதிா்கால சந்ததியினா் கடைப்பிடிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. விநாயகா் சதுா்த்தி பாதுகாப்புப் பணியில் திறம்பட செயலாற்றிய அனைத்து காவல்துறை அதிகாரிகள், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு பாராட்டுகள், நன்றிகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

வியத்நாம் டூ தூத்துக்குடி.! வின்ஃபாஸ்ட் கார்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT