தமிழ்நாடு

11 தமிழக மீனவா்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதிய கடிதம்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை பிடித்துச் செல்லப்பட்டனா். அவா்களின் விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கெனவே, 11 மீனவா்கள் 95 மீன்பிடி படகுகளுடன் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனா்.

அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக 12 தமிழக மீனவா்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இப்போது கைது செய்யப்பட்ட மீனவா்களையும், அவா்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT