வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.20 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நீர்நிலைகள், கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு ஏன்?
நீர்வழிகளில் உள்ள குப்பைகள், வணல் மண், அடைப்புகளை அகற்ற நிதி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்வழிகளில் தடையின்றி நீரோட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.