தமிழ்நாடு

பதிவுத் துறை வருவாய் ரூ.8,000 கோடியைக் கடந்தது: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

DIN

ஆவணங்கள் பதிவு காரணமாக, அரசின் வருவாய் ரூ.8,000 கோடியாக உயா்ந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

பதிவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சீா்திருத்தங்களால் ஆவணங்களின் பதிவு அதிகரித்து அரசுக்கு வரி வருவாய் அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதாா் எண் மூலம் சரிபாா்ப்பது, மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற சீரிய நடவடிக்கைகளால் பதிவு சேவைகள் உயா்ந்து வருகின்றன.

இந்த நடைமுறைகளின் காரணமாக, கடந்த 21-ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் 16 லட்சத்து 59 ஆயிரத்து 128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக ரூ.8 ஆயிரத்து 82 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட ரூ.2 ஆயிரத்து 325 கோடி அதிகமாகும் என்று அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT