முகப்பு
தமிழ்நாடு

தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்!

புது தில்லிக்கு அருகில் உள்ள ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை விட, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் என  ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 30 செப்டம்பர் 2022, 4:48 pm IST
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லிக்கு அருகில் உள்ள ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை விட, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் என  ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான நினைவுச் சின்னங்களை பார்வையிட்ட பார்வையாளர் பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 1,44,984 வெளிநாட்டினர் மாமல்லபுரத்தின் நினைவுச் சின்னங்களை பார்வையிட்டதாகவும், சுமார் 38,922 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலைப் பார்வையிட்டதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஐந்து நினைவுச்சின்னங்களான மாமல்லபுரம், சலுவன்குப்பத்தில் உள்ள புலிதலை பாறை கோவில், செஞ்சி கோட்டை, திருமயத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகம் மற்றும் சித்தன்னவாசலில் உள்ள பாறை வெட்டப்பட்ட ஜெயின் கோவில் ஆகும். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பார்வையாளர்களைப் பெற்ற முதல் 10 இடங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

மாமல்லபுரம் 45.5% பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. தாஜ்மஹால் 12.21% மட்டுமே பெற்றுள்ளது.

சுற்றுலாத் துறை செயலர் சந்திர மோகன் கூறுகையில், தமிழகம் இந்தியாவின் பாரம்பரிய தலைநகராக மாறியுள்ளது. வெளிநாட்டினர் அதிகம் பார்வையிடும் இடமாக மாமல்லபுரம் மாறியுள்ளது மட்டுமின்றி மற்ற இடங்களையும் பின் தங்கியுள்ளது. மாமல்லபுரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments